கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழகம் - புதிய வேந்தர்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழகத்துக்கு புதிய வேந்தர்

by Rajalingam Thrisanno 23-12-2022 | 6:41 PM

ஓய்வுபெற்ற ஜெனரல் ஷாந்த கோட்டேகொட சேர்.ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

05 வருட பதவி காலத்திற்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது