14 மணித்தியாலங்களுக்குள் 2ஆவது துப்பாக்கிச்சூடு

எல்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு - 14 மணித்தியாலங்களுக்குள் 2ஆவது துப்பாக்கிச்சூடு

by Rajalingam Thrisanno 23-12-2022 | 10:44 PM

எல்பிட்டிய யக்கடுவ சந்தியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். 

மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவர்  எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதேவேளை, சீதுவ கொட்டுகொட பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். 


மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் கலிகனெலியவில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால்  தல்தூவ தெரிவித்தார். 

கொடுகொட பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஆணொருவர் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.