ரஷ்ய முன்னாள் துணை பிரதமர் காயம்

யுக்ரெய்னின் ஷெல் தாக்குதலில் ரஷ்யாவின் முன்னாள் துணை பிரதமர் காயம்

by Rajalingam Thrisanno 22-12-2022 | 8:40 PM

யுக்ரெய்னின் ஷெல் தாக்குதலில் ரஷ்யாவின் முன்னாள் துணை பிரதமர் Dmitry Rogozin காயமடைந்துள்ளார்.

யுக்ரெய்னின் கிழக்கு பிராந்தியத்தில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள நகரொன்றிலுள்ள ஹோட்டலை ஷெல் தாக்கிய போதே அவர் காயமடைந்துள்ளார்.

தமது தோள்மூட்டில் காயமேற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் முன்னாள் துணை பிரதமர் Dmitry Rogozin மேற்குலகின் சித்தாந்தங்களுக்கு எதிரானவரென்பதுடன் யுக்ரெய்ன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை ஆதரிப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டொனெட்ஸ்க் நகரின் புறநகர் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளன.

இதனை தவிர யுக்ரெய்னின் தாக்குதல்களில் ரஷ்யாவின் முகவரமைப்பான டொனெட்ஸ் மக்கள் குடியரசின் தலைவரும் காயமடைந்துள்ளார்.