மூன்றாம் தவணை ஜனவரி 2 ஆம் திகதி ஆரம்பம்

பாடசாலைகளில் மூன்றாம் தவணை ஜனவரி 2 ஆம் திகதி ஆரம்பம்

by Rajalingam Thrisanno 22-12-2022 | 8:22 PM

அரச மற்றும் அரச அனுமதியுடன் இயங்கும் தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைந்தன.

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் அடுத்த வருடம் ஜனவரி 2 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி அரச விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர்களின் மாநாட்டில் கலந்துகொண்டிருந்த பிரதமர் தினேஷ் குணவர்தன இதற்கான அறிவிப்பை வௌியிட்டதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வருடம் நத்தார் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை என்பதால் மறுநாள் திங்கட்கிழமை அரச விசேட  விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சு கூறியுள்ளது.