.webp)

திருகோணமலை ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு தொகை வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து இன்று மாலை குறித்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக நியூஸ் ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
47 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஈச்சிலம்பற்று விசேட புலனாய்வு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சந்தேகநபரின் வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகநபரை மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நியூஸ் ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பாக ஈச்சிலம்பற்று பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
