டிசம்பர் 26ஆம் திகதி அரச விசேட விடுமுறை தினம்

டிசம்பர் 26ஆம் திகதி அரச விசேட விடுமுறை தினமாக அறிவிப்பு

by Staff Writer 22-12-2022 | 12:44 PM

Colombo (News 1st) எதிர்வரும் 26ஆம் திகதி, விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர்களின் மாநாட்டில் கலந்துகொண்டிருந்த பிரதமர் தினேஷ் குணவர்தன இதனை அறிவித்ததாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வருடம் நத்தார் பண்டிகை ஞாயிற்றுக்கிழமையில் வருகின்றமையால், அதற்கடுத்த நாள் திங்கட்கிழமை(26) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.