10 மணி நேர மின்வெட்டு அமுலாகும் என்ற கருத்து உண்மைக்கு புறம்பானது - அமைச்சர் கஞ்சன

by Chandrasekaram Chandravadani 21-12-2022 | 12:39 PM

Colombo (News 1st) நிலக்கரி இன்மையால் 10 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சார பொறியிலாளர்கள் தெரிவித்த கருத்து உண்மைக்கு புறம்பானது என மின்சக்தி - எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

அவர்களுக்கு எதிராக சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.