காணாமல் போன சிறுவனை தேடி விசாரணை

எப்பாவல பிரதேசத்தில் காணாமல் போன சிறுவனை தேடி விசாரணை

by Staff Writer 21-12-2022 | 12:09 PM

Colombo (News 1st) எப்பாவல - கிரலோகம பகுதியில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுவனை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

குறித்த சிறுவன் நேற்று முன்தினம்(19) இரவு முதல் காணாமல் போயுள்ளார்.

சிறுவனின் வீட்டிற்கு அருகில் வேல்டிங் பட்டறையை நடத்தி வந்த நபரொருவரே குறித்த சிறுவனை அழைத்துச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.