9 இலங்கையர்கள் இந்திய முகாமில் கைது

9 இலங்கையர்கள் இந்திய முகாமில் கைது

by Staff Writer 20-12-2022 | 9:45 AM

Colombo (News 1st) போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் தொடர்பில் இலங்கை பிரஜைகள் 09 பேர், இந்திய தேசிய பாதுகாப்பு விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டிலுள்ள அகதிகள் முகாமொன்றில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள குணா, லடியா, தனுக ரொஷான், சுரங்க உள்ளிட்டவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேசிய பாதுகாப்பு விசாரணை பிரிவினரால் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.