தலைமை பொறுப்பிலிருந்து விலகுமாறு வாக்கு பதிவு

தலைமை பொறுப்பிலிருந்து எலன் மஸ்க்கை விலகுமாறு பயனர்கள் வாக்கு பதிவு

by Staff Writer 20-12-2022 | 8:57 AM

Colombo (News 1st) ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து எலன் மஸ்க்கை(Elon Musk) விலகுமாறு பெரும்பாலான பயனர்கள் தமது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

ட்விட்டரின் பிரதம நிறைவேற்று அதிகாரி எனும் பதவியில் தமது எதிர்காலம் தொடர்பில் வாக்களிக்குமாறு, ட்விட்டர் பயனர்களிடம் எலன் மஸ்க் கோரிக்கை விடுத்திருந்தார்.

நிறுவனத் தலைவர் பொறுப்பிலிருந்து தாம் விலக வேண்டுமா என தம்மை பின்தொடரும் 122 மில்லியன் பயனர்களிடம் வாக்கெடுப்பு ஒன்றில் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் 17.5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பங்கெடுத்த இந்த வாக்கெடுப்பில் 57.5 வீதமானோர் ஆம் எனவும் 42.5 வீதமானோர் இல்லையெனவும் வாக்களித்துள்ளனர்.

தொழில்நுட்பவியல் பிரபலமான அவர் Tesla மற்றும் Space X நிறுவனங்களையும் நடத்தி வருகின்றார்.