.webp)

Colombo (News 1st) எதிர்வரும் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் தெஹிவளை மிருகக்காட்சி சாலையை இலவசமாக பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தேசிய மிருகக்காட்சி சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 23ஆம் திகதி சிரேஷ்ட பிரஜைகளும் எதிர்வரும் 24ஆம் திகதி சிறுவர்களும் இலவசமாக மிருகக்காட்சி சாலையை பார்வையிட முடியும் என தேசிய மிருகக்காட்சி சாலைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் பிரேமகாந்த குறிப்பிட்டார்.
எதிர்வரும் 23, 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள மிருகக்காட்சி சாலையின் சுற்றாடல் கல்வி கண்காட்சிக்கு இணையாக இந்த சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
