.webp)

Colombo (News 1st) பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகுவதிலிருந்து மீட்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், பிரிகேடியர் தர்சன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
புதிய செயற்றிட்டத்தை அமுல்படுத்த அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
பெற்றோர்கள் தமது பிள்ளைகள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகுவதை தடுப்பதற்கு விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு, பொலிஸார் உள்ளிட்ட தரப்புடன் கலந்துரையாடி இந்த திட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதய குமார குறிப்பிட்டார்.
