பூம்புகார் கிராமத்தில் திடீரென உயிரிழந்த கால்நடைகள்

by Staff Writer 19-12-2022 | 4:21 PM

Colombo (News 1st) வவுனியா - பூம்புகார் கிராமத்தில் திடீரென 8 கால்நடைகள் இறந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா - பூம்புகார் கிராமத்தில் நேற்று(18) மாலை உழுந்து செய்கையொன்றில் மேய்ச்சலுக்காக சென்ற கால்நடைகளே இவ்வாறு இறந்துள்ளன.

உழுந்து செய்கைக்கு யூரியா கலவை தௌிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை உண்டதனால் இவை இறந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், கால்நடைகள் இறப்பதற்கான காரணத்தை கண்டறிவதற்கு கால்நடை வைத்தியர்களை சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் குறிப்பிட்டனர்.