சிறுநீரக மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மனிதநேய பணி

by Staff Writer 19-12-2022 | 9:50 PM

Colombo (News 1st) நாட்டை கட்டியெழுப்பும் மக்கள் அரணாக செயற்படும் கம்மெத்த இன்று(19) மற்றுமொரு செயற்றிட்டத்தை ஆரம்பித்தது.

குறைந்த வசதிகளைக் கொண்ட எமது நாட்டின் பின்தங்கிய கிராமங்களில் மாத்தளை - பளுபிட்டிய கிராமமும் ஒன்றாகும்.

இந்த கிராமத்தில் 250 இற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள முடியாமல் பல வருடங்களாக சிரமத்தை எதிர்கொண்டனர்.

இந்த கிராமத்தில் ஏற்கனவே 50 இற்கும் மேற்பட்டவர்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பளுபிட்டிய கிராம மக்களின் இந்தப் பிரச்சினையை அடையாளம் கண்ட கம்மெத்த அதற்கான தீர்வினை வழங்குவதற்கான நடவடிக்கையை இன்று(19) ஆரம்பித்தது.

பளுபிட்டிய கிராம மக்களுக்கான நீர் சுத்திகரிப்பு தொகுதி பளுபிட்டிய ஆரம்பப்பிரிவு பாடசாலை வளாகத்தில் அமைக்கப்படவுள்ளது.

இந்தப் பிரச்சினையை எதிர்காலத்திற்கும் கொண்டு செல்ல தேவையில்லை என்பதால் கிராமத்தவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விரைவில் இந்த நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்து இவர்களின் மகிழ்ச்சியை மேலும் அதிகரிப்பதே கம்மெத்தவின் நோக்கமாகும்.