.webp)
Colombo (News 1st) 2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் ஆர்ஜென்டீனா வெற்றிவாகை சூடியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் ஆர்ஜென்டீன அணிகள் மோதின.
போட்டிக்கான மேலதிக நேர முடிவில் இரு அணிகளும் தலா 03 கோல்களைப் போட்டு சமநிலையில் இருந்தன.
அதற்கமைய, வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பில் ஆர்ஜென்டீனா, 4 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
ஆர்ஜென்டீன அணி உலகக் கிண்ணத்தை சுவீகரித்த மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.