இன்று(18) நாட்டை வந்தடையவுள்ள Ocean Odyssey கப்பல்

நாட்டை வந்தடையவுள்ள அமெரிக்க செல்வந்த பயணிகளை ஏற்றிய Ocean Odyssey கப்பல்

by Staff Writer 18-12-2022 | 2:41 PM

Colombo (News 1st) அமெரிக்காவின் செல்வந்த சுற்றுலாப் பயணிகள் 108 பேரை ஏற்றிய 'ஓஷன் ஒடிஸி' (Ocean Odyssey) கப்பல் இன்று(18) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. 

அமெரிக்க நிறுவனமொன்றுக்கு சொந்தமான இந்த கப்பல் 105 மீட்டர் நீளம் கொண்டதாகும். 

இந்த கப்பல் முதல்தடவையாக கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளமையை குறிக்கும் வகையில் கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் கப்பல் கெப்டன் ஆகியோருக்கு இடையில் நினைவுப்பரிசும் பரிமாற்றப்படவுள்ளது. 

இந்தியாவின் கொச்சின் துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ள இந்த கப்பல் நாளை(19) திருகோணமலை துறைமுகம் நோக்கி பயணிக்கவுள்ளது. 

Ocean Odyssey கப்பலில் வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் கொழும்பு, குருணாகல், ஹபரணை, சிகிரியா மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளவுள்ளனர்.

குறித்த கப்பல் எதிர்வரும் 21ஆம் திகதி இரவு 7 மணிக்கு திருகோணமலை துறைமுகத்தில் இருந்து தாய்லாந்து நோக்கி புறப்படவுள்ளது.