இறத்தோட்டை - நிக்கலோயா தோட்ட மண்சரிவில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்த மக்கள்...

by Staff Writer 18-12-2022 | 5:05 PM

Colombo (News 1st) மாத்தளை - இறத்தோட்டை, நிக்கலோயா தோட்டத்தில் மண்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்து இன்றுடன்(18), 10 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. 

இறத்தோட்டை அரச பெருந்தோட்ட யாக்கத்திற்குட்பட்ட நிக்கலோயா தோட்டத்தில் 2012ஆம் ஆண்டு இதே போன்றதொரு நாளில் மண்சரிவு ஏற்பட்டது

இந்த அனர்த்தத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்த 10 பேரையும் நினைவுகூரும் வகையில் இன்று(18) நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், சாத்வீத கவனயீர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.

சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.