பம்பலப்பிட்டியில் வர்தகரின் வீட்டில் கொள்ளை

பம்பலப்பிட்டியில் வர்தகரின் வீட்டில் கொள்ளை: துப்பாக்கி, நகைகள், பணம் திருட்டு

by Bella Dalima 17-12-2022 | 3:59 PM

Colombo (News 1st) பம்பலப்பிட்டி - ஸ்கெல்டன் வீதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இருந்து உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியும் 12 ரவைகளும் மகசீனும் திருடப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீட்டில் இருந்த ஒரு கோடியே ஒரு இலட்சம் ரூபா பணம், 6000 அமெரிக்க டொலர் மற்றும் 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான நகைகளும் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் மூன்றாவது மாடிக்குள் நுழைந்து இவை திருடப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.