.webp)

Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலிக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலினி கமகே இன்று (16) பிணை வழங்கினார்.
15,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல நீதவான் அனுமதி வழங்கினார்.
எனினும், திலினி பிரியமாலிக்கு விதிக்கப்பட்டுள்ள வௌிநாட்டு பயணத்தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் எனவும் சந்தேகநபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நிதி மோசடி தொடர்பில் திலினி பிரியமாலி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
