.webp)

Colombo (News 1st) எதிர்வரும் சில மாதங்களில் சமூக பாதுகாப்பு வலையமைப்பு பலப்படுத்தப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தெஹிவளை கல்கிசை மாநகர சபையில் நடைபெற்ற ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது அவர் இதனை கூறியுள்ளார்.
சமூக பாதுகாப்பு வலையமைப்பை பலப்படுத்துவதற்காக சந்வதேச நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிடைக்குமெனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தற்போது பல்வேறு தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
