.webp)
Colombo (News 1st) நாட்டின் முன்னணி நிறுவனமொன்றின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஒருவரும் பிரபல வர்த்தகக் குழுமத்தின் உறுப்பினருமான தினேஷ் ஷாப்டர் (Dinesh Schaffter) சிலரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த நிலையில், இன்று (15) மாலை பொரளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தினேஷ் சாப்தவின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.