.webp)
Colombo (News 1st) இறுக்கமான நிதிக் கொள்கைகள் மற்றும் ஆசியாவின் வேகமான பணவீக்கம் ஆகியன பொருளாதாரத்தை மேலும் கீழ் மட்டத்திற்கு இட்டுச் செல்வதால், இலங்கை மந்தமான நிலையில், ஆழமான வீழ்ச்சியை அடையும் சாத்தியமுள்ளதாக Bloomberg வர்த்தக இணையத்தளம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வருடம் ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் நாட்டின் பொருளாதாரம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் சுருங்கியுள்ளதாக இணையத்தளம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 8.4 சதவீதத்தால் பொருளாதாரம் சுருங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிக பணவீக்கம் மற்றும் நம்பிக்கையீனம் காரணமாக கேள்வி மேலும் குறைவடைந்துள்ளதாக
Bloomberg தெற்காசிய பொருளாதார நிபுணர் Ankur Shukla தெரிவித்துள்ளார்.