அல்வாய் வடக்கில் வாள்வெட்டு தாக்குதலில் ஐவர் காயம்

அல்வாய் வடக்கில் வாள்வெட்டு தாக்குதலில் ஐவர் காயம்

by Bella Dalima 15-12-2022 | 6:55 PM

Colombo (News 1st) யாழ்ப்பாணம் - அல்வாய் வடக்கு, மகாத்மா வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (14) நள்ளிரவு அல்வாய் வடக்கு மகாத்மா வீதியில் மோதல்  இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயங்களுக்கு உள்ளான மூவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் இருவர்  யாழ். போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதலின் ​போது 15 மாத குழந்தை  ஒன்றும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, காயமடைந்தவர்களை ஏற்றிச்செல்வதற்காக வருகை தந்த அம்பியூலன்ஸிற்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

சம்வம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய, 4 சந்தேகநபர்களை தேடி வருவதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.