அரச வளங்களை மறுசீரமைத்து 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்ட எதிர்பார்ப்பு

by Staff Writer 15-12-2022 | 7:34 PM

Colombo (News 1st) அடுத்த வருடம் அரச வளங்களை மறுசீரமைப்பதன் மூலம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்ட எதிர்பார்க்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Reuters செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

சில அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதில் ஜனாதிபதி ஆர்வம் காட்டும் அதேவேளை, அதனூடாக எதிர்பார்க்கப்படும் சுமார் 03 பில்லியன் டொலரை பெற்றுக்கொள்வதற்கான இயலுமை ஏற்பட்டால், திறைசேரி மற்றும் கையிருப்பு என்பன பலப்படுத்தப்படுமென வௌிவிவகார அமைச்சர்   அலிசப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து எதிர்பார்த்துள்ள கடனுதவிக்கு, அதன் நிறைவேற்று சபையிடமிருந்து எதிர்வரும் ஜனவரி மாதம் அனுமதி கிடைக்கப்பெறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.