.webp)

New Zealand: 2009 ஆம் ஆண்டிற்கு பிறகு பிறந்தவா்களுக்கு சிகரெட் விற்க தடை விதிக்கும் புதுமையான சட்டத்தை நியூசிலாந்து அரசு இயற்றியுள்ளது.
1 ஜனவரி 2009 அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து வருங்கால சந்ததியினரை படிப்படியாக மீட்பதற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இதன்படி, இன்னும் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவர் சிகரெட் வாங்க வேண்டுமென்றால், அவருக்கு குறைந்தது 63 வயதாவது ஆகியுள்ளது என்பதை நிரூபித்தாக வேண்டும்.
2025-ஆம் ஆண்டுக்குள் நியூசிலாந்தை புகைப்போர் அற்ற நாடாக்கும் இலக்குடன் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
எனினும், அதற்கு முன்னதாகவே இந்த தீய பழக்கம் நாட்டில் படிப்படியாகக் குறைந்துவிடும் என்று சுகாதார நிபுணா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
புதிய சட்டத்தின் கீழ், சிகரெட் விற்பனையாளா்களின் அதிகபட்ச எண்ணிக்கை 6000 இல் இருந்து 600-ஆக குறைக்கப்படும். மேலும், சிகரெட்களில் அனுமதிக்கப்படும் நிக்கோடின் அளவும் குறைக்கப்படும்.
இந்த சட்டமூலத்தை பரிந்துரைந்த அந்நாட்டின் சுகாதார அமைச்சர் அயேஷா வேரல் (Ayesha Verrall), புகைத்தல் இல்லாத எதிர்காலத்தை நோக்கிய முதற்படி இதுவென தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட காலம் வாழ்வார்கள் எனவும் புகை பிடிப்பதால் ஏற்படும் நோய்களுக்காக செலவழிக்க தேவையில்லை எனவும் அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.
நியூஸிலாந்து அரசாங்கத்தினால் கடந்த நவம்பர் மாதம் வௌியிடப்பட்ட தரவுகளுக்கு அமைய, 8 வீதமானவர்களே புகை பிடிப்பதாக தெரியவந்துள்ளது.
2009 ஜனவரி 1 அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவருக்கும் புகையிலையை விற்க முடியாது என்பதை உறுதிசெய்து, ஆண்டுதோறும் அதிகரித்து வரும் புகைபிடிக்கும் வயதை நடைமுறைப்படுத்திய உலகின் முதல் நாடு நியூசிலாந்து என்று நம்பப்படுகிறது.
