கலைப்பீட விரிவுரையாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட விரிவுரையாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

by Staff Writer 14-12-2022 | 7:37 AM

Colombo (News 1st) பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீட விரிவுரையாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரின் மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார். 

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பில்  ஐவடங்கிய விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.