.webp)
Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் ஹுனுப்பிட்டிய கங்காராமய விஹாரையில் இன்று (14) முற்பகல் நடைபெற்ற தானம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கொழும்பு - ஹுனுபிட்டிய கங்காராம விகாரையின் விஹாராதிபதி கலபொட ஞானிஸ்ஸர தேரரின் 80 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று பகல் தானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தானம் வழங்கும் நிகழ்வின் ஆரம்பம் முதல் கலந்துகொண்டிருந்ததுடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பின்னர் விஹாரைக்கு வருகை தந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் நிகழ்வில் பங்கேற்றார்.
இந்த தானம் வழங்கும் நிகழ்வில் மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் திம்புல் கும்புரே விமல தம்மநாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் கங்காராமய விகாரையை புனித பூமியாக பிரகடனம் செய்து, அபிவிருத்தி செய்வதற்கான பத்திரத்தை கலபொட ஞானிஸ்ஸ தேரரிடம் ஜனாதிபதி சமர்ப்பித்தார்.
சமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து தானம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதியும், முன்னாள் ஜனாதிபதிகளும் கலந்துகொண்டனர்.