.webp)
அர்ஜென்டினா அணி 6 ஆவது தடவையாக உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
குரோஷியா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
கட்டார் லுசையில் மைதானத்தில் 88 ஆயிரத்திற்கும் அதிக இரசிகர்கள் முதல் அரையிறுதி போட்டியை பார்வையிட சென்றிருந்தனர்.
போட்டியின் 34 ஆவது நிமிடத்தில் தமக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பினை பயன்படுத்திய அர்ஜென்டினா, அதனை கோலாக மாற்றியது.
போட்டியின் 39 ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா மற்றுமொரு கோலை போட்டதுடன், முதல் பாதியில் 2-0 என்ற ரீதியில் முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியில் அர்ஜென்டினா மேலும் ஒரு கோலை போட்டது.
இதன் பிரகாரம், 3-0 என்ற ரீதியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றதுடன், 2014 ஆம் ஆண்டிற்கு பின்னர் முதல் தடவையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகக்கிண்ண கால்பந்து தொடர்களில் அர்ஜென்டினா சார்பில் அதிக கோல்களைப் போட்ட வீரர் என்ற பெருமையை Lionel Messi
தனதாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகக்கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியுடன் அர்ஜென்டின அணியிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக நட்சத்திர வீரர் Lionel Messi அறிவித்துள்ளார்.