.webp)

Colombo (News 1st) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கால்நடைகள் உயிரிழந்தமைக்கு அதிக குளிரே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஆய்வு செய்த குழு நேற்று(12) தமக்கு தொலைபேசியூடாக இந்த விடயத்தை அறிவித்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த சில தினங்களில் மாத்திரம் சுமார் 1,200 கால்நடைகள் இறந்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொத்தலாவல கூறினார்.
எனினும், தற்போது வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து கால்நடைகள் இறக்கின்றமை குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
