வசந்த முதலிகேவின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு

by Staff Writer 13-12-2022 | 1:48 PM

Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், வசந்த முதலிகேவை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 17ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று(13) ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வசந்த முதலிகே தொடர்பான விசாரணையை துரிதமாக நிறைவு செய்து, நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மேலதிக நீதவானினால் பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.