.webp)
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - காரைநகரில் மேற்கொள்ளப்படவிருந்த காணி அளவீட்டு நடவடிக்கை மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.
காரைநகர் - நீலங்காடு பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான 40 ஏக்கர் காணியை அளவிடுவதற்கு நில அளவை திணைக்களத்தினர் இன்று அங்கு சென்றிருந்தனர்.
எனினும், குறித்த இடத்திற்கு சென்ற காணி உரிமையாளர்களும் பொதுமக்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் காணி அளவிடுவதற்கு தமது எதிர்ப்பினை வௌியிட்டனர்.
இதன் பின்னர் தமது கோரிக்கைகள் அடங்கிய மஹஜரை நில அளவை திணைக்களத்திடம் பொதுமக்கள் வழங்கினர்.