.webp)
Colombo (News 1st) புதிய வரித்திருத்தத்திற்கு எதிராக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தினர் நாடளாவிய ரீதியில் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
'அரசாங்கத்தின் வரி விதிப்புக் கொள்கை, மக்களை அழுத்தத்திற்குள்ளாக்கும் வரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்போம்' எனும் தொனிப்பொருளில் இந்த பணிப்பகிஷ்கரிப்புடன் கூடிய எதிர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் இன்று அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு முன்பாக கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் சக ஊழியர்களும் அமைதியான முறையில் கவனயீர்ப்பில் பங்கேற்றனர்.
யாழ். பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பினை இன்று மேற்கொண்டிருந்தனர்.