வசந்த முதலிகேவிற்கு நாளை(13) வரை விளக்கமறியல்

by Staff Writer 12-12-2022 | 6:26 PM

Colombo (News 1st) மீண்டும் நீதிமன்றத்தில் இன்று(12) ஆஜர்ப்படுத்தப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே நாளை(13) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

விசாரணைகள் நிறைவு பெறாமையினால் சட்ட மா அதிபரின் பரிந்துரையை நீதிமன்றத்திற்கு அறிவிக்க முடியாதுள்ளதாக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மன்றில் தெரிவித்தார்.