.webp)
-477801.jpg)
Colombo (News 1st) பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர், பேராசிரியர் அதுல சேனாரத்ன மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த பேராசிரியரும் பேராசிரியரின் புதல்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேராசிரியரின் புதல்வர் செலுத்திய கார், நேற்றிரவு(10) மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவத்தை அடுத்து, பேராசிரியரின் வீட்டை சுற்றிவளைத்த குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
