.webp)
Colombo (News 1st) பலத்த காற்று காரணமாக அம்பாறை சங்கமன்கண்டி கிழக்கு கடற்பிராந்தியத்தில் மீனவப் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்திற்குள்ளான படகிலிருந்த இதுவரை நால்வர் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர், கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.
விபத்தில் காணாமற்போன மற்றுமொரு மீனவரைத் தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
திருகோணமலை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 26ஆம் திகதி கடற்றொழிலுக்கு சென்ற நீண்ட நாள் 05 மீனவர்களுடன் சென்ற மீன்பிடி படகொன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.