.webp)
Colombo (News 1st) ஒரு கோடி ரூபா கப்பம் பெறும் நோக்கில் நபரொருவரை கடத்திச்சென்ற சந்தேகநபர் ஒருவர் காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த கடத்தல் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.