யாழ். மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் சிலர் கொழும்பு விஜயம்

by Staff Writer 10-12-2022 | 8:39 PM

Colombo (News 1st) யாழ். மாவட்டத்திலுள்ள சில உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் கொழும்பிற்கு மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். 

யாழ். மாநகர சபை ,  வலிகாமம் தென்கிழக்கு பிரதேச சபை,  வலிகாமம் தெற்கு பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு  பிரதேச சபை ,  நல்லூர் பிரதேச சபையின் 95 உறுப்பினர்கள் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தனர். 

கொழும்பு மாநகர சபையின்  அழைப்பிற்கிணங்க இந்த விஜயம் முன்னெடுக்கப்பட்டது. 

விஜயத்தின் முதலாம் நாளான நேற்று  பாராளுமன்றம், கொழும்பு மாநகர சபை, பொதுநூலகம் மற்றும் சுதந்திர சதுக்கத்தை அவர்கள் பார்வையிட்டனர். 

இதனைத்  தொடர்ந்து கொழும்பு மாநகர  சபை மற்றும் ஏனைய சபைகளுக்கு  இடையில் சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றது.