மனித உரிமை கொள்கை பிரகடனம் வௌியிடப்பட்டு 75 வருடங்கள் பூர்த்தி; ஸ்டைன் கலையகத்தில் விசேட நிகழ்வு

by Staff Writer 10-12-2022 | 8:29 PM

Colombo (News 1st) மனித உரிமை கொள்கை பிரகடனம் வௌியிடப்பட்டு 75 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு விசேட நிகழ்வு ஒன்று இன்று இரத்மலானை ஸ்டைன் கலையகத்தில் நடைபெற்றது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் சிரேஷ்ட மனித உரிமை ஆலோசகர் Juan Fernandez-Jardon, ஆசிய பசுபிக் ஔிபரப்பு சங்கத்தின் நிகழ்ச்சி பணிப்பாளர் Yasu Naghata, கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர் சசி ராஜமகேந்திரன் மற்றும் சட்டத்துறையின் வல்லுநர்கள், இராஜதந்திரிகள், வங்கி மற்றும் வர்த்தக துறையின் சிரேஷ்ட உறுப்பினர்கள், கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்​போது கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர் சசி ராஜமகேந்திரன் இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் தொடர்பில் தௌிவுபடுத்தினார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பிலான ஆணையாளர் Volker Türk-இன் செய்தியும் இதன்போது வௌியிடப்பட்டது.

அம்பலாங்கொட ரூகட நாடமும் இதன்போது அரங்கேற்றப்பட்டது.

மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற விவாதப் போட்டியின் இறுதிப் போட்டியும் இன்று நடைபெற்றது.

மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு உள்ள சிறந்த  வழி கல்வியா, இல்லையா என்ற தொனிப்பொருளில் Royal Institute மற்றும் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் இடையில் இறுதிப் போட்டி நடைபெற்றது.

இதன்போது, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு உள்ள சிறந்த வழி கல்வி என வாதிட்ட பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடம் வெற்றி பெற்றது.

இதேவேளை,  சிங்கள மொழி விவாதப் போட்டியில்  வெற்றி பெற்ற கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் இரண்டாம் இடத்தைப் பெற்ற திறந்த பல்கலைக்கழக குழுக்களுக்கு இதன்​போது நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டன.

தமிழ் பிரிவில் CFPS சட்டக் கல்வி நிறுவனம் வெற்றி பெற்றது.