இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை அதிகரிப்பு

by Staff Writer 10-12-2022 | 3:29 PM

Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம், இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் புதிய விலை 1240 ரூபாவாகும்.

சமூக பாதுகாப்பு வரி அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் பால் மா விலையை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் கலாநிதி லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.