குளிரான வானிலை தொடரும்; வட மாகாணத்தில் தொடர்ந்தும் மழை பெய்யும்

by Bella Dalima 09-12-2022 | 4:04 PM

Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் நிலவும் குளிரான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

தென்மேல் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள Mandous சூறாவளியினால் குளிரான வானிலை நிலவுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், வட மாகாணத்தில் தொடர்ந்தும் மழை பெய்யும் எனவும் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரை மழை வீழ்ச்சி பதிவாகலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

சப்ரகமுவ, மத்திய, மேல் மாகாணங்களிலும் காலி , மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.