வடக்கு, கிழக்கில் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழப்பு

வடக்கு, கிழக்கில் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

09 Dec, 2022 | 8:21 pm

Colombo (News 1st) கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை மாவட்டங்களில் இதுவரையில் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.​ 

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டானில் 7 பண்ணையாளர்களின்  60 கால்நடைகள் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி மாவட்டத்தின்  பொன்நகர், நாகேந்திரபுரம், புண்ணை நீராவி , பூநகரி, கண்டாவளை உள்ளிட்ட பகுதிகளில் 20 பண்ணையாளர்களுக்கு சொந்தமான  45 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 

கிளிநொச்சி  புளியம்பொக்கனை கண்டாவளை , கல்மடு , மயில்வாகனபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் 50-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன.   

திருகோணமலை தோப்பூரிலும் 15 பண்ணையாளர்களின் 50-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

இதேவேளை, கால்நடைகளின் உயிரிழப்பு தொடர்பில் ஆராய்வதற்காக  வைத்திய ஆராய்ச்சி நிறுவகத்தின் குழுவொன்று சம்பவ இடங்களுக்கு செல்லவுள்ளனர். 

கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் – டொக்டர் ஹேமாலி கொத்தலாவெல இதனை நியூஸ்ஃபெஸ்டிற்கு உறுதிப்படுத்தினார். 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்