டிசம்பர் 14 நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்த தடை

டிசம்பர் 14 நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்த தடை

டிசம்பர் 14 நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்த தடை

எழுத்தாளர் Bella Dalima

09 Dec, 2022 | 5:23 pm

Colombo (News 1st) டிசம்பர் 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடையும் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சையுடன் தொடர்புடைய வகுப்புகள், பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரீட்சையில் வரக்கூடிய வினாக்கள் அல்லது மாதிரி வினாக்கள் வழங்கப்படும் என சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப்பிரசுரங்கள், இலத்திரனியல் ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D.தர்மசேன தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்