English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
08 Dec, 2022 | 3:53 pm
Colombo (News 1st) 2022 ஆம் ஆண்டு உலக அளவில் கூகுளில் (Google) அதிகம் தேடப்பட்ட சொற்களில் முதல் 10 இடங்களைப் பெற்றுள்ள வார்த்தைகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நமக்குத் தேவையான பல தகவல்களை உடனடியாகப் பெற கூகுள் தேடுபொறியையே நம்பியுள்ளோம். அந்த அளவிற்கு அதன் தேவை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள் எவை என்பது குறித்து கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் இருப்பதால், கூகுள் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் உலக அளவில் அதிகம் தேடப்பட்ட சொற்களில், வோர்டில் (Wordle) என்ற சொல் முதலிடம் பிடித்துள்ளது. இது இணைய வார்த்தை விளையாட்டு. உலக அளவில் அதிக அளவிலான மக்கள் இந்த சொல்லை கூகுளில் தேடியுள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக இந்தியா – இங்கிலாந்து (India vs England) சொல் உள்ளது.
கடந்த ஆண்டில் அதிகம் பேசப்பட்ட உக்ரைன் போரால், உக்ரைன் (Ukraine) எனும் சொல் 3 ஆவது இடம்பிடித்துள்ளது.
அதற்கு அடுத்தபடியாக ராணி எலிசபெத் (Queen Elizabeth), 5 ஆவது இடத்தில் இந்தியா – தென்னாப்பிரிக்கா (Ind vs SA), 6 ஆவது இடத்தில் உலகக்கோப்பை (World Cup), 7 ஆவது இடத்தில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் (India vs West Indies), 8 ஆவது இடத்தில் ஐ-போன் 14 (iPhone 14), 9 ஆவது இடத்தில் அமெரிக்க சீரியல் கில்லரான ஜெஃப்ரெ தாமெர் (Jeffrey Dahmer), 10 ஆவது இடத்தில் இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) சொல் அதிகம் தேடப்பட்டுள்ளது.
கூகுளில் நடப்பாண்டில் அதிகம் தேடப்பட்ட சொற்களில் விளையாட்டு தொடர்பான சொற்களே அதிகம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
12 Jan, 2023 | 04:56 PM
09 Dec, 2022 | 07:49 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS