மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று(08)

வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று(08)

by Staff Writer 08-12-2022 | 7:42 AM

Colombo (News 1st) 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று(08) இடம்பெறவுள்ளது.

பாராளுமன்றத்தில் இன்றிரவு(08), 07 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

சபாநாயகரின் தலைமையில் இன்று(08) காலை 9.30 மணி முதல் இரவு 07 மணி வரை பாராளுமன்ற சபை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.