படைப்புழுவை ஒழிக்க ஒட்டுண்ணி அறிமுகம்

படைப்புழுவை ஒழிக்க ஒட்டுண்ணி அறிமுகம்

by Bella Dalima 08-12-2022 | 5:00 PM

Colombo (News 1st) சோள செய்கையை தாக்கும் படைப்புழுவை ஒழிப்பதற்கு ஒட்டுண்ணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விவசாய திணைக்களத்தினால் கடந்த மூன்று வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் பின்னர் ஒட்டுண்ணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டெலினோமஸ் ரிமஸ் (Telenomus remus) என்ற இந்த ஒட்டுண்ணி இயற்கை சூழலில் பரம்பலடையக்கூடியது.

படைப்புழுக்களின் முட்டைகளை குறித்த ஒட்டுண்ணி அழிப்பதோடு, படைப்புழுவின் பரவலையும் கட்டுப்படுத்தும் என விவசாய அமைச்சு கூறியுள்ளது.

இதனால் படைபுழுக்களை அழிக்க இரசாயன கிருமிநாசினிகளை பயன்படுத்த வேண்டியதில்லை எனவும் விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.