பலாலி – சென்னை விமான சேவை விரைவில் மீள ஆரம்பம்

பலாலி – சென்னை விமான சேவை விரைவில் மீள ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

08 Dec, 2022 | 7:24 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – பலாலியில் இருந்து சென்னைக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.  

இரண்டு  வருட  இடைவெளியின் பின்னர் மீண்டும்  எதிர்வரும் 12 ஆம் திகதி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இதன் முதற்கட்டமாக சென்னைக்கும் பலாலிக்கும் இடையே வாரமொன்றில் நான்கு விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை – யாழ்ப்பாணம் இடையிலான விமான போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. 

தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை விமான போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்பட்ட நிலையில், COVID தொற்று காரணமாக விமான போக்குவரத்து  கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்