English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
08 Dec, 2022 | 8:48 pm
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் வளி மாசடைந்துள்ளது.
கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் உடல் நலத்திற்கு தீங்கை ஏற்படுத்தும் அளவிற்கு காற்று மாசடைந்து காணப்படுகிறது.
இலங்கையில் காற்றின் தரம் தொடர்பாக Airquality.lk இணையத்தளம் தகவல் வௌியிட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் வளி மாசு தரக்குறியீடு 150 ஐ விட அதிகரித்திருந்தது.
இந்தியாவில் இருந்து அதிகளவு தூசு அடங்கிய காற்று இலங்கை நோக்கி வீசுவது தெரியவந்துள்ளது.
நாட்டை சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை காரணமாக இந்தியாவில் இருந்து தூசு அடங்கிய காற்று இலங்கை நோக்கி வீசுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.
வளி மாசு தரக்குறியீடானது அதிகரிப்பதால், சுகாதார ரீதியான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளி மாசடைவு, சுவாச நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மேலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
காற்று மாசடைந்து காணப்படுகின்ற சந்தர்ப்பங்களில் தரமான முகக்கவசங்களை அணிந்து வௌியில் நடமாடுவதே உகந்தது என சுகாதார தரப்பினர் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
03 Feb, 2023 | 08:15 PM
03 Feb, 2023 | 07:41 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS