English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
08 Dec, 2022 | 9:53 am
Colombo (News 1st) இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக பீடி இலைகளை கடத்த முற்பட்ட இந்திய மீனவர்கள் 8 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக பீடி இலைகளை கடத்த முற்பட்ட இந்திய மீனவர்கள் 8 பேர் கற்பிட்டியில் கடந்த 05ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
கற்பிட்டி கடற்பகுதியில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 02 இந்தியப் படகுகள் சுற்றிவளைக்கப்பட்டன.
சுற்றிவளைக்கப்பட்ட 02 படகுகளிலும் இருந்த 8 மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 8 பேரும் புத்தளம் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் நேற்று(07) ஆஜர்படுத்துப்பட்டனர்.
இதன்போது எதிர்வரும் 12ஆம் திகதி வரை 08 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் எஸ்.எம்.சி. சதுரசிங்ஹ உத்தரவு பிறப்பித்ததாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
07 Feb, 2023 | 09:25 AM
07 Feb, 2023 | 07:02 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS