அணுவாயுத போருக்கான அச்சுறுத்தல் அதிகரிப்பு – ரஷ்ய ஜனாதிபதி புட்டின்

அணுவாயுத போருக்கான அச்சுறுத்தல் அதிகரிப்பு – ரஷ்ய ஜனாதிபதி புட்டின்

அணுவாயுத போருக்கான அச்சுறுத்தல் அதிகரிப்பு – ரஷ்ய ஜனாதிபதி புட்டின்

எழுத்தாளர் Staff Writer

08 Dec, 2022 | 8:06 am

Colombo (News 1st) அணுவாயுதப் போர் ஏற்படுவதற்கான அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ரஷ்யா முட்டாளாகி விடவில்லை எனவும் அணுவாயுதங்களை முதலில் பயன்படுத்தாது எனவும் அவர் கூறியுள்ளார்.

தாக்குதலொன்றுக்கு பதிலளிக்கையில் பேரழிவுகள் ஏற்படும் பட்சத்தில் மாத்திரமே தமது நாடு அணுவாயுதங்களை பயன்படுத்தும் என ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போரானது நீண்ட செயன்முறையாக அமையலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் போரில் உடனடியான வெற்றியொன்றை பெற ரஷ்ய ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக மேற்குலக அதிகாரிகள் நம்பிக்கை வௌியிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்