ஜனவரி முதல் காகிதமற்ற மின்சார பட்டியலும் பற்றுச்சீட்டும் அறிமுகம்

by Bella Dalima 07-12-2022 | 5:29 PM

Colombo (News 1st) எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து மின்சார பாவனையாளர்களுக்கும் காகிதமற்ற மின்சார பட்டியலும் பற்றுச்சீட்டும் அறிமுகப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தெரு விளக்குகளை பொருத்துதல், அவற்றை இயக்குவதை ஒழுங்குபடுத்துதல் குறித்தும் அதற்கு மின்சார சபையில் தற்போதுள்ள ஊழியர்களை பயன்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.  இப்பணிகளுக்கு உள்ளூராட்சி மன்றங்களின் உதவிகளைப் பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை மின்சார சபையின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

இதன்போது, மின்சார சபையின் செலவுகளைக் குறைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன்,  அதன் புதிய தலைமையக நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துமாறு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. 

 

1) A meeting was held with the AGMs & DGMs of CEB. Islandwide DGMs connected online. Discussed steps taken to reduce expenses & further steps that could be taken to reduce the costs at CEB. Instructions were given to hold the ongoing construction work of the CEB new headquarters. pic.twitter.com/IKibMaWqXx

— Kanchana Wijesekera (@kanchana_wij) December 7, 2022

2) Decided to introduce paperless bills & receipts from Jan to all customers, regulate the fixing of street lamps & operating street lamps, outsourced services to be done with existing staff & work that cannot be competed by CEB to be done with the assistance of Local Councils.

— Kanchana Wijesekera (@kanchana_wij) December 7, 2022